சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இந்த சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னையில் கடந்த ஆண்டு 102 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், நடப்பாண்டு 82ஆக குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே சென்னையில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இல்லங்களுக்கு கடந்த 6 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க அமெரிக்கா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை எனவும் அதனாலேயே அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்ட விரோதச் செயலுக்கு பயன்படுத்தப்படும் டார், விபிஎன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பப்படுவதால் துப்பு துலக்குவதில் இடர்ப்பாடு ஏற்படுள்ளதாக காவல் ஆணையம் அருண் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதன் பின்னணியில் இருவர் இருப்பதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















