டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் காஷ்மீரில் மேலும் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகித்த மத்திய புலனாய்வு அமைப்புகள், விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளன. இது தொடர்பாக 6 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தஜமுல்லை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லி கார் வெடிப்பு சதியில் கைதான மருத்துவர்களுடன் தஜமுல்லுக்கு தொடர்பு உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
















