டெல்லியில் கார் வெடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை தவிர மேலும் 2 கார்களை மருத்துவர் உமர் நபியும், அவரது கூட்டாளிகளும் வாங்கியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் நபி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த உமர் நபியின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உமர் நபிக்கு உதவியாக இருந்த அமீர் ரஷீத் மிர் மற்றும் அவரது குடும்பத்தினரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
அதில், கார் வெடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை தவிர மேலும் 2 கார்களை மருத்துவர் உமர் நபியும், அவரது கூட்டாளிகளும் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் வாங்கப்பட்ட 2 கார்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
















