டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லி சம்பவம் தொடர்பாக மருத்துவர் பர்வேஷ் அன்சாரி என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 6 பட்டன் செல்போன்கள் இருந்ததாகவும் அவை வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளிடம் பேசப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகக் கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பிருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகித்து உள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கருதப்படும் மருத்துவர் உமர் நபி, மேலும் இரு கார்களை வாங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















