அமெரிக்கா முன்னிலையில் கம்போடியாவுடன் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாகத் தாய்லாந்து எச்சரித்துள்ளது.
கம்போடியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிசாகெட் மாகாணத்தில் கண்ணிவெடி வெடித்து நான்கு வீரர்கள் காயமடைந்ததாகத் தாய்லாந்து ராணுவம் கூறியது.
தாய்லாந்து படையினர் வழக்கமாக ரோந்து செல்லும் அந்தப் பகுதியில் கண்ணிவெடி வைப்பது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிரானது.
இதன் காரணமாக ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாகத் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
















