ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பிளக்ஸ் போர்டு அச்சகத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய கார்த்திக், மார்க்கெட் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அக்கும்பல் கார்த்திக்கை துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டுத் தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து வந்த பரமக்குடி போலீசார், உடலைக் கைப்பற்றித் தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
















