மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் கவனம் பெற்ற கொடைக்கானலின் குணா குகைக்குக் கேரளாவை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து உற்சாகமாகப் பொழுதைக் களித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய நிலையில் கடந்த ஒரு ஆண்டாகக் குணா குகை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகமாக உள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ள குணா குகைக்குக் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தற்போது கேரளாவிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் சுற்றுலாவிற்காகக் கொடைக்கானலுக்கு வருகை புரிந்து குணா குகை பகுதியில் மஞ்சுமெல் பாய்ஸ் படங்களில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்களை செய்து காட்டி மகிழ்ந்தனர்.
மேலும் நட்சத்திர ஏரியில் பனிமூட்டங்களுக்கு மத்தியில் படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் பொழுதைக் களித்தனர்.
















