சென்னை அம்பத்தூரில் மளிகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்திப்பட்டு அரசுப் பள்ளி அருகே உள்ள மளிகை கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















