சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நண்பரின் தவறான நடத்தையை தட்டிக்கேட்ட இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.புதூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ், தவறான நோக்கில் பல பெண்களுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனை அவரது நண்பர் பச்சமுத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ், பச்சமுத்துவை கத்தியால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பச்சமுத்துவின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















