நெல்லையில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை சிதம்பராபுரத்தை சேர்ந்த ஐயப்பன், காவல்கிணறு பகுதியில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த வளர்ப்பு நாய், ஐயப்பனை கடித்துள்ளது.
ஆனால், நாய்க்கடியை பொருட்படுத்தாத ஐயப்பன், சிகிச்சை பெறாமல் இருந்து வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு ரேபிஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















