ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்டிருந்த மேகங்களைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டில் தற்போது உறைபனி சீசன் நிலவுகிறது. இதன் காரணமாக லேடி சீட் பகுதியில் அலை அலையாய் மேகங்கள் திரண்டிருந்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், இதமான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
















