விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 66 லட்ச ரூபாய் பாக்கி தொகை செலுத்தாததன் காரணமாகச் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் பகுதியில அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கடந்த நான்கு மாதங்களாக விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கான பாக்கி தொகை கடந்த நான்கு மாதங்களில் 66 லட்சத்து 69 ஆயிரத்து 581 ரூபாயை எட்டியுள்ளது.
இதன் காரணமாகச் சுங்கக்கட்டணம் செலுத்தப்படாத அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனால், அரசுப் பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பு மிகுந்த பகுதியாகக் காணப்பட்டது.
















