மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே புதிய குவாரி அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்யக் கோரி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஏற்கனவே உள்ள குவாரிகள் நிலத்தை அதிகளவு தோண்டுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கருத்துகளைப் பெறாமலேயே புதிதாக 3 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அத்திரமடைந்த கிராம மக்கள், கல்லணையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















