உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையடுத்து, நெல்லை மாநகரில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 44 சிறிய பாலங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
நெல்லையில் உபரிநீர் வாய்க்காலின் குறுக்கே அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டிருப்பதால், வெள்ள நீர் செல்ல வழி இல்லாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அனுமதியின்றியும், தாழ்வாகவும் கட்டப்பட்டிருந்த 11 பாலங்கள் கடந்த ஜூலை மாதம் இடித்து அகற்றப்பட்டன.
எனினும், மீதமுள்ள 44 பாலங்கள் அகற்றப்படாமல் இருந்தன. இது, பருவமழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதால் பொதுமக்களுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன.
எனவே இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் 14ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு பாலங்கள் அகற்றப்படும் என அரசுத் தரப்பு உறுதியளித்தது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் 44 பாலங்களையும் அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
















