சென்னை சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனையைப் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
போலீசாரின் ஆதரவை பெற்றே விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சட்டவிரோத லாட்டரி விற்பனையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள், கூலி தொழிலாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, லாட்டரி விற்பனை தொடர்பான வீடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















