பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை உயர்வது குறித்த கேள்விக்கு மல்லிகை பூக்களின் விலை உயரவில்லையா என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பதில் அளித்துள்ளனர்.
கோவையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், சாலை வரி தொடர்பாகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
அண்டை மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் தொழில் செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை உயர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா எனப் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தனர்.
















