டெல்லி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் மற்றொரு காரையும் வாங்கியிருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பான தகவல்களை அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கு அனுப்பி எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்தில் புதர் மண்டியிருந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















