திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், பாஷா என்பவர் தனது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்துள்ளார்.
இங்கே முயல் வேட்டைக்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சாமுண்டி என்ற இளைஞரும் அருண்குமார் என்ற 17 வயது சிறுவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இதனை மறைக்கும் நோக்கில், அவர்களின் உடல்களை அருகிலிருந்த விவசாய கிணற்றில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர்,
இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி பாட்ஷாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
















