சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யாததால் மதகுப்பகுதி சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
திருவள்ளூர் சோழவரம் ஏரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஆனால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் மதகுப்பகுதிகளில் சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரைகளை சுற்றி போடப்பட்ட தார் சாலையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் உடைந்து விழுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். சோழவரம் ஏரியானது முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், உடனடியாக விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















