விவசாய நிலத்தை விசிக கட்சி பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கல்லூரி பேராசிரியர் புகார் மனு அளித்துள்ளார்.
தேனி கே.ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது 2 ஏக்கர் நிலத்தை சண்முகவேல் என்பவருக்கு ஓராண்டுக்கு குத்தகைக்கு விடுத்துள்ளார். இந்நிலையில் பெரியகுளததை சேர்ந்த விசிக நிர்வாகி மூர்த்தி என்பவர் சாந்தியின் தோட்டத்தை ஆக்கிரமித்து விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது குறித்து கேட்டபோது மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாந்தி புகார் அளித்தார். மேலும், விசிக பிரமுகரிடம் இருந்து நிலத்தை மீட்டு தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
















