உலகில் மிகவும் விலையுயர்ந்த சுற்றுலா விசா வைத்திருக்கும் நாடாகப் பூடான் உள்ளது.
விசா என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அனுமதியாகும். வெளிநாட்டவர் ஒருவர் சுற்றுலா, வேலை, படிப்பு போன்றவற்றிற்காக அந்நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கும், அங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்குவதற்கும் விசா வழங்கப்படுகிறது.
விசா பொதுவாகத் தாங்கள் செல்ல விரும்பும் நாட்டின் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்து, தங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையாகவோ அல்லது ஒரு தனி ஆவணமாகவோ வழங்கப்படும்.
சில நாடுகளில் விசா கட்டணம் பயணச் செலவைவிட அதிகமாக இருக்கும் நிலையில், உலகின் மிக விலை உயர்ந்த சுற்றுலா விசா வைத்திருக்கும் நாடாகப் பூடான் உள்ளது.
ஒரு பயணி ஐந்து நாட்கள் பூடானில் தங்கினால், ஹோட்டல் மற்றும் விமானச் செலவுகளைத் தவிர்த்து, அரசாங்கக் கட்டணமாகச் சுமார் 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இதில் இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
















