திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள நிலையில், நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
குப்பைகளை கொட்டுவதற்கு பயன்பாடற்ற பாறைக்குழியை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து குப்பைகளை கொட்டி வந்தது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என வேதனை தெரிவித்த மக்கள், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பினர்.
















