பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், பதவி உயர்வு, முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல் உள்ளிட்டவை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த 10ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் 4வது நாளான இன்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் தேர்வு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து பாஜக சட்டமன்ற பொறுப்பாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற பொறுப்பாளர் சரவணக்குமார், பேராசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
















