தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஊத்துப்பட்டியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் அய்வு செய்த அதிகாரிகள், அங்குள்ள குடோனில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இயற்கை உரங்கள் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். விருதுநகரில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், இங்கு உரங்கள் வைக்கப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.
எனினும் உரிய அனுமதியின்றி உரங்களைப் பதுக்கி வைத்தது, வேளாண் உரங்கள் தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குற்றம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
















