25 ஆயிரத்து 60 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டு முதல் வரும் 2030 மற்றும் 31ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிராயத் புரோட்சஹான், நிராயத் திஷா அகிய 2 துணை திட்டங்கள்மூலம் இவை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கடன்களை எளிதாகவும், குறைந்த வட்டியிலும் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் கடன் உதவி வழங்க 10 ஆயிரம் கோடி ரூபாயும் சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க 15 ஆயிரத்து 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருட்கள்மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இத்திட்டம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















