சென்னை கோட்டூர்புரத்தில் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் வீட்டு வாசலில், உருது மொழியில் “அல்லாஹ்” என்று எழுதிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்று வீட்டு வாசலில் உருது மொழியில் “அல்லாஹ்” என எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி, அளித்த புகாரின் பேரில், உணவு டெலிவரி ஊழியர் அகமதுவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
வாகன சாவியால் வீட்டின் சுவற்றில் “அல்லாஹ்” என எழுதியதாகவும், இதுபோன்று எழுதும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
எனினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















