உலகின் முதல் எல்லை தாண்டிய ரோபோ உதவியுடன் கூடிய இதய அறுவை சிகிச்சையைச் சீன மருத்துவர் ஒருவர் வெற்றிகரமாகச் செய்து முடித்து உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் இல்லாத இடங்களிலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, தொலைதூரக் கட்டுப்பாடு மற்றும் ரோபோ தொழில்நுட்பம்மூலம் சீன மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பிரான்சின் போர்டியாக்ஸில் இருந்த சீன மருத்துவர், சீனாவின் ஜியாமெனில் இருந்த நோயாளிக்கு அதிநவீன அறுவை சிகிச்சை ரோபோவை இயக்கி இதய அறுவை செய்தார். மருத்துவர் இருந்த இடத்திற்கும், நோயாளி இருந்த இடத்திற்கும் இடையேயான தூரம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது.
இது அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது. இச்சாதனை, தொலைதூரப் பகுதிகளிலும், மருத்துவ நிபுணர்கள் இல்லாத இடங்களிலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, தொலைதூரக் கட்டுப்பாடு மற்றும் ரோபோ தொழில்நுட்பம்மூலம் எதிர்காலத்தில் தீர்வு காண முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
















