ஜப்பானின் கியோட்டோவா அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டுள்ள கண்கவர் டிஜிட்டல் முப்பரிமான காட்சி அரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
ஜப்பானின் கியோட்டோவாவில் உள்ள புகழ்பெற்ற டீம்லேப் அருங்காட்சியத்தில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் சதுர அடிக்கு அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஒளியைப் பயன்படுத்தி முப்பரிமான காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
டீம்லேப் அருங்காட்சியகம், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பார்வை, உணர்வு மற்றும் தொடர்பு ஆகியவற்றை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் கண்கவர் டிஜிட்டல் முப்பரிமான காட்சிகளை கண்டு பிரமித்து வருகின்றனர்.
மேகக் கூட்டங்கள்போல் செயற்கையாக உருவாக்கப்பட்ட நுரைகளை தொட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலாகித்தனர்.
















