திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் இதில் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்றும் நாளையும் NON DESTRUCTIVE TEST என்று சொல்லப்படும் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அதனால் 2 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















