திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டு வரிக்கான ரசீது வழங்க லஞ்சம் கேட்ட தற்காலிக பெண் பணியாளர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்படடனர்.
கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி, தனலட்சுமி ஆகியோர் அங்கு உள்ள ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் விவசாயி ஒருவர், வீட்டு வரிக்கான ரசீதை வழங்கக் கோரி ரேவதியை அணுகி உள்ளார்.
அதற்கு அவர் 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான செல்போன் ஆடியோ வெளியானதை அடுத்து ரேவதி, தனலட்சுமி ஆகியோரை பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
















