அரசியலமைப்பு சட்டத்தை மீறித் திருச்சி எஸ்ஆர்ஆம் ஹேட்டாலை தமிழக சுற்றுலாத்துறை கையகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவன வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில், எஸ்ஆர்எம் ஹோட்டல் செயல்பட்டு வந்தது.
குத்தகை காலம் முடிந்ததாகக் கூறி அந்த நிலத்தைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் கைப்பற்றியது.
இது தொடர்பாக அந்நிறுவன வழக்கறிஞர் சையத் அகமது, சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கைப்பற்றியதாகவும், விடுதியில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெயேற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் எஸ்ஆர்எம் நிறுவனம் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
















