திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
பல்லடம் அருகே உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலானது, 124 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும்.
வாவி பாளையம் பகுதி வழியாகச் செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிச் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















