பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டிற்கு அண்மையில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும் அவரது வீட்டு வாசலில் உருது மொழியில் வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் அமர் பிரசாத் ரெட்டி வலியுறுத்தினார்.
















