ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே தடுமாறி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
AIdol என்று பெயரிடப்பட்ட மனித உருவிலான ஏ.ஐ., ரோபோ மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னணி இசை ஒலிக்க ரோபோ மிகவும் மெதுவாக மேடையில் நடந்து சென்று, கூட்டத்தினரைப் பார்த்துக் கை அசைத்தது.
பின்னர் சில நிமிடங்களில் ரோபோ தடுமாறி கீழே சரிந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த ஊழியர்கள் உடனே மேடைக்கு ஓடிச் சென்று ரோபோவை சரி செய்ய முயன்றும், முயற்சி கைக்கொடுக்கவில்லை.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், எலான் மஸ்கின் பழைய ரோபோ வீடியோக்களுடன் ஒப்பிட்டு இது தான் ரஷ்யாவின் தொழில்நுட்ப திறனா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
















