கொலம்பியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததில் காணாமல் போன தங்களது குழந்தைகள் என்றாவது திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆற்றில் படகு விட்டுப் பெற்றோர் வேண்டுதலில் ஈடுபட்டனர்.
கொலம்பியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள பனிமூடிய நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, உலகின் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த 1985ஆம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இந்த எரிமலை வெடித்ததில், பனி உறுகி சக்தி வாய்ந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அர்மேரோ நகருக்குள் புகுந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் மாயமாகினர். இச்சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் கடந்த நிலையில், காணாமல் போன தங்களது குழந்தைகள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆற்றில் காகிதப் படகுகள் விட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர்.
















