ரஷ்யாவில் பெண் பயணி ஒருவர், கார் ஓட்டுநரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் சமாரா நகரில் பெண் ஒருவர், டாக்ஸிசியில் பயணித்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர், “சான்சன்” எனப்படும் பிரெஞ்ச் பாடல்களை ஒலிக்கச் செய்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து அந்தப் பெண், ஓட்டுநரிடம் பாடல்களை மாற்றக் கோரியதாகத் தெரிகிறது. அதற்கு கார் ஓட்டுநர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அந்தப் பெண், தனது கைப்பையில் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், பாடலை மாற்றியதுடன், அந்தப் பெண் கூறிய இடத்தில் இறக்கி விட்டுள்ளார்.
இதுகுறித்த காட்சிகள் காரில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கார் ஓட்டுநர், போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, அந்தப் பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.
















