சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இல்லம், நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லம் என அரசியல் தலைவர்கள், உச்ச நட்சத்திரங்கள் 7 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நடிகைகள் சாக்ஷி அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய காவலர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடங்களில் மோப்ப நாய்மூலம் சோதனை மேற்கொண்டனர். முடிவில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
















