போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைநகர் காபோரோனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக, டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இருநாடுகள் இடையிலான 60 ஆண்டு கால ராஜதந்திர உறவைக் கொண்டாடும் தருணம், வரலாற்று சிறப்புமிக்கது எனத் தெரிவித்தார்.
போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, கபோரோனில் உள்ள மகோலோடி சரணாலயத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
அப்போது, அந்நாட்டு அதிபர் டுமா போகோ முன்னிலையில் 8 சிறுத்தைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய திரௌபதி முர்மு, ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படும் எனத் தெரிவித்தார்.
















