குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கால்நடை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என சூளுரைத்தார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். அப்போது, டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
















