டெல்லி பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அந்தஸ்தை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ரத்து செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரில் உள்ளது அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம். இங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, அந்த பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அந்தஸ்தை, A.I.U ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் அனுப்பியுள்ள நோட்டீசில், இந்திய பல்கலைக்கழக சங்க விதிகளின்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் நல்ல முறையில் செயல்படும் வரைதான் உறுப்பினராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஃபரிதாபாத் பல்கலைக்கழகம் நல்ல முறையில் செயல்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதாகவும், இனி எந்த சூழலிலும் தங்களின் பெயரையோ, லோகோவையோ பயன்படுத்த கூடாது எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
















