பணமோசடி விவகாரத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை என, சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
மின்வாரியத்தில் பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் ரூபாயை நடிகர் தினேஷ் மோசடி செய்ததாக, பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், நியாயம் கேட்ட பெண்ணின் கணவரை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த சின்னத்திரை நடிகர் தினேஷ், போலீசார் தன்னை கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையை அறிந்த போலீசார் தன்னை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
















