தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாகம்பிரியாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் கோயிலில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக மண்டபத்தில் எழுந்தருளிய பாகம்பிரியாள் சுவாமி, மேல தாளங்கள் முழங்க திருத்தேரில் வீதியுலா வந்தார். இதில் சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சுவாமி எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
















