ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் “வந்தே மாதரம்” பாடலின் 150வது ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வங்க மொழி எழுத்தாளர் பங்கிம் சந்திசட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் கடந்த 7ம் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதையொட்டி நாடு முழுவதும் வந்தே மாதர பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை கடற்கரையில் “வந்தே மாதரம்” 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம், தேசிய மாணவர் படையின் காரைக்குடி அணி சார்பில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, ஒருமித்த குரலில் வந்தே மாதரம் பாடினர்.
















