கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறநிலையத்துறையின் அலட்சியத்தால் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எனக் கூறியுள்ளது.
அனுபவம் இல்லாத ஒப்பந்த நிறுவனத்திற்கு, குளத்தைத் தூர்வாரும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகக் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் குளத்தில் இருந்து அதிகமான கனிமவளம் எடுக்கப்பட்டதால் குளத்தின் சுவர் சேதமடைந்துள்ளதாகவும், கனிமவள திருட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளது.
சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
















