அங்கோலா மற்றும் போட்ஸ்வானா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, போட்ஸ்வானா அகிய நாடுகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 8ம் தேதி பயணம் மேற்கொண்டார்.
அங்கு நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். மேலும் அங்கோலா, போட்ஸ்வானா நாடுகளின் அதிபர்களுடன் வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து திரௌபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு போட்ஸ்வானாவில் இருந்து தனி விமானம்மூலம் குடியரசுத் தலைவர் டெல்லி வந்தடைந்தார்.
















