“தமிழ் ஜனம்” தொலைக்காட்சி எதிரொலியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் ஏலச்சீட்டு நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் பணி நேரத்தில், மருத்துவமனையின் ஒப்பந்த பாதுகாவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் பணி நேரத்தில் ஏலச்சீட்டு நடத்தியது தொடர்பாக “தமிழ் ஜனம்” தொலைக்காட்சி ஆதாரத்துடன் செய்தி ஒளிபரப்பியது.
இதையடுத்து ஏலச்சீட்டு நடத்திய மேற்பார்வையாளர்கள் உட்பட 3 பேரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
















