தனியார் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி மேம்பாடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு யுஜிசி விதிப்படி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
















