மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு, பீகார் மக்கள் தங்களது முழுமையான ஆதரவை அளித்துள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகார் தேர்தலில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. நடந்து முடிந்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அம்மாநில மக்கள் பரிசளித்துள்ளார்கள்.
சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களோடும், செயல்பாடுகளோடும் இயங்கி வருகின்ற ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக அம்மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதற்கு சான்றாக இன்றைய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.
மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த 11 ஆண்டுகளாக நமது மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு, பீகார் மக்கள் தங்களது முழுமையான ஆதரவை அளித்துள்ளார்கள்.
பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக உழைத்த, தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
















