விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கலிவரதன், விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த வாரம் 500 டன் யூரியா உரம், கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதனை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனால் மாவட்டத்தில் கடுமையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
















