சீனாவை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் தனது புதிய காரைச் சோதித்த பார்த்தபோது எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொண்டது.
சீனாவை சேர்ந்த பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் செரி ஆட்டோமொபைல். இது 1997 இல் நிறுவப்பட்டது. செரி, ஜெட்டூர், EXEED மற்றும் iCAR போன்ற பிராண்டுகளை கொண்டுள்ளது.
பயணிகள் கார்கள், வணிக வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உட்பட பல வகையான வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் அதன் புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், புதிய காரான ஃபெங்யுன் X3L-ஐ, தியான்மென் மலையில் உள்ள ஸ்கை லேடர் எனப்படும் 999 படிக்கட்டுகளில் ஏற்றிச் சோதனை செய்யச் செரி நிறுவனம் முயன்றது. ஆனால், முன்னே செல்ல முடியாமல் பின்னே வந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.
















